தேடலும் காதலும்



இரவில் நிழலை தேடும்
நிலையில் நான் என் காதலே...
நிழலை தொடரும் மழலை
மனமே என் நிலையே..
தேடல் எல்லாம் என்னவோ..
உந்தன் காதலை தேடி
அலைந்த பின் தாகம்
தீர்க்கும் ஒரு முத்தம் தாயேன்..
தாயின் மடி பிரிந்து என் 
இதயத் தாளத்தின் மடி
தேடினேன்..
உன் கூந்தல் மலராய் மாற நீ கேட்க்கிறாய்
மலரானேன் எனில் 
ஒரு நாளில் மடிந்துவிடுவேனே..
மலராய் வேண்டாம் உன் 
மணாலனாய் ஏற்றுக்கொள்..
சத்தியம் செய்கிறேன்
கரை சேரும் அலை போல் அல்ல
என் காதல்...