வணக்கம்! தமிழ் வாழ்க. நேராக விடயத்திற்கு வருகிறேன். வங்கிகளிலும், தானியங்கி வங்கி இயந்திரத்திலும் ( ATM ) ( வேறு தமிழ் சொல் இருந்தால் பரிந்துரைக்கவும் ) தமிழ் மொழி சேவைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்னும் நம்மில் பலர் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளாமல் ஆங்கிலத்திலே இந்த சேவைகளை பயன்படுத்துகிறோம். இந்த சின்ன விடயத்தில் என்ன உள்ளது. இதனால் என்ன தமிழ் அழிந்தாபோய்விடும் என்ற சந்தேகம் தோன்றுகிறதா ? தொடர்ந்து படியுங்கள் கூறுகிறேன்.
|
தானியங்கி வங்கி இயந்திரம்
|
இது உண்மையிலேயே ஒரு சின்ன விடயமாக கூட இருக்கலாம் . ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. யோசித்துப்பாருங்கள், இன்று வங்கி சேவைகளில் தமிழ் உள்ளது. திடிரென்று ஒரு நாள் இந்த தமிழ் சேவைகளை எவரும் பயன்படுத்துவதில்லை என்று சேவைகளின் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் ? அந்த பட்டியலில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே மிஞ்சி இருக்கும். அதனால் தான் முடிந்த அளவுக்கு அனைத்து சேவைகளையும் முக்கியமாக வங்கி சார்ந்த சேவைகளை தமிழில் பயன்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.
சிலருக்கு தமிழில் சேவைகளை பயன்படுத்துவது சிறிது சிரமமாக இருக்கலாம். ஆனால், சில நாட்கள் பயன்படுத்தியப்பின்னர் இது ஆங்கிலத்தை விடவும் எளிமையாக இருக்கும் என்பதே உண்மை. ஆதலால், தயவு கூர்ந்து வங்கிசேவைகளை ( தானியங்கி வங்கி இயந்திரத்தில் பயன்பாட்டு மொழி தமிழ், ஆங்கிலம், இந்தி என்று வரும்போது தமிழை தொடவும் ) தமிழில் பயன்படுத்துங்கள். அப்படி தமிழ் சேவைகளை சில தானியங்கி வங்கி இயந்திரத்தில் இல்லாமல் இருந்தால் யோசிக்காமல் தமிழ் சேவைகள் வேண்டுமென்று புகார் செய்யவும். மறந்துவிடாதீர்கள், இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறிய செயல் நம் தமிழ் மொழியை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றலாம் . தமிழ் வாழ்க! |
உங்களின் பின்னூட்டத்தை இடுங்கள். மேலும் உங்களின் பின்னூட்டம் யாரையும் காயப்படுத்தாதவாறு இருத்தல் வேண்டும்