பாரதி...
இவன் பார்வையில் பிறக்குதடா பெருந்தீ
இது அழிவில்லாதோர்
செந்தமிழ் தீ...
இது அழிவில்லாதோர்
செந்தமிழ் தீ...
இவன் பெயரும் எரிக்குதடா இங்கே அநீதி
இவன் கவிதையும் படைக்குதடா இங்கே நீதி...
இவன் கவிதையும் படைக்குதடா இங்கே நீதி...
இவன் முறுக்கிவிட்ட மீசையில் தான்
இங்கே தமிழும் கொள்ளுது
அலங்காரம்...
இங்கே தமிழும் கொள்ளுது
அலங்காரம்...
இவன் மறைந்து போனாலும் கூட
இவன் கவி மறையாதவோர்
அவதாரம்...
இவன் கவி மறையாதவோர்
அவதாரம்...
அன்னைத்தமிழின் மகனென்று மார்தட்டி
அன்னநடை போட்டவர்கள் இங்கே ஆயிரம் பேர்...
அன்னநடை போட்டவர்கள் இங்கே ஆயிரம் பேர்...
அன்னை தமிழே தாயென்று தலைமேல்வைத்து
அவளுக்கு ஆனந்தகண்ணீர் அளித்தோர் இவன்போல் எத்தனை பேர்...
அவளுக்கு ஆனந்தகண்ணீர் அளித்தோர் இவன்போல் எத்தனை பேர்...
மூச்சுக்கு மூன்னூறுதடவை தமிழென்று மூச்சுரைத்து
மூச்சு நிற்கும் வரையிலும் தமிழுக்கு முச்சளித்தவன்...
மூச்சு நிற்கும் வரையிலும் தமிழுக்கு முச்சளித்தவன்...
முண்டாசுக்கட்டி முத்தமிழ் கவி படைத்து
மீசைமுறுக்கி ரௌத்திரம் பழகென்றுரைத்த தமிழன்...
கவிதைக்குள் கர்வம்படைத்து கவிஞனுக்கு கர்வங்கொடுத்தவன்
கண்ணிமைமேல் தமிழ்வைத்து கண்மூடும்வரைத்தமிழ் காத்தவன்...
இவன்விதி முடித்து இங்கே விதியும் தவறிழைத்தது
இவன்விதி முடிந்தபின்புதான் விதியுமதை அறிந்துகொண்டது...
இவன்விதி முடிந்தபின்புதான் விதியுமதை அறிந்துகொண்டது...
இவன்மறைந்த பின்பு இவன்முன்பு சென்றவர் எவருமில்லை
இவன் முறுக்குமீசைக்குபின் எக்கவிஞன் மீசையும் இவன்போல்
இவன் முறுக்குமீசைக்குபின் எக்கவிஞன் மீசையும் இவன்போல்
நிமிரவில்லை !
என்பதாலோ இத்தமிழ்நாடும் இன்பத்தமிழும்
இன்னும் மீண்டு எழுந்தபாடில்லை...
- கவிஞன் மொழி
உங்களின் பின்னூட்டத்தை இடுங்கள். மேலும் உங்களின் பின்னூட்டம் யாரையும் காயப்படுத்தாதவாறு இருத்தல் வேண்டும்