சாளரம்
சாளரம் 
                                     
  

  படபடவென
  பட்டுத்தெறிக்கும்
  வாடைக் காற்றின்
  வாசனைப் பட்டால்...

  அசையாமல் நின்றிடும்
  அசைந்தாடும் காற்று இவளை
  அழையாமல் போனால்...

  மௌனமொழி கூறிடும்
  பவனத்தின் காதில் மெல்ல...

  காற்றும் காலதரும்
  அறிந்த காதல் அது
  அறிந்தேன் நானும்
  கொஞ்சம் இன்று...

  - கீர்த்தி பாரதி...

  பொருள் அறிக
  பவனம் - காற்று
  காலதர் - சன்னல்